இயற்றியவர் : கபிலர்
கடவுள் வாழ்த்து
முக்கட் பகவ னடிதொழா தார்க்கின்னாபொற்பனை வெள்ளையை யுள்ளா தொழுகின்னாசக்கரத் தானை மறப்பின்னா வாங்கின்னாசத்தியான் றாடொழா தார்க்கு.
நூல்
பந்தமில் லாத மனையின் வனப்பின்னாதந்தையில் லாத புதல்வ னழகின்னாஅந்தண ரில்லிருந் தூணின்னா வாங்கின்னாமந்திரம் வாயா விடின். (1)
பார்ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னாஆர்த்த மனைவி யடங்காமை நன்கின்னாபாத்தில் புநடைவை யுடையின்னா வாங்கின்னாகாப்பாற்றா வேந்த னுலகு. (2)
கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னாநெடுநீர் புணையின்றி நீந்துத லின்னாகடுமொழி யாளர் தொடர்பின்னா வின்னாதடுமாறி வாழ்த லுயிர்க்கு. (3)
எருதி லுழவர்க்குப் போகீர மின்னாகருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னாதிருவுடை யாரைச் செறலின்னா வின்னாபெருவலியார்க் கின்னா செயல். (4)
சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னாஉறைசேர் பழங்கூரை சேர்ந்தொழுக லின்னாமுறையின்றி யாளு மரசின்னா வின்னாமறையின்றிச் செய்யும் வினை. (5)
அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா@மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுக லின்னாஇடும்பை யுடையார் கொடையின்னா வின்னாகொடும்பா டுடையார்வாய்ச் சொல். (6)
ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னாநாற்ற மிலாத மலரி னழகின்னாதேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னாமாற்ற மறியா னுரை. (7)
பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னாநகையாய நண்பினார் நாரின்மை யின்னாஇகலி னெழுந்தவ ரோட்டின்னா வின்னாநயமின் மனத்தவர் நட்பு. (8)
கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னாவள்ளல்க ளின்மை பரிசிலர்க்கு முன்னின்னாவண்மை யிலாளர் வனப்பின்னா வாங்கின்னாபண்ணில் புரவி பரிப்பு. (9)
பொருளணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த லின்னாஇருள்கூர் சிறுநெறி தாந்தனிப்போக் கின்னாஅருளில்லார் தங்கட் செலவின்னா வின்னாபொருளில்லார் வண்மை புரிவு. (10)
உடம்பா டில்லாத மனைவிதோ ளின்னாஇடனில் சிறியரோ டியர்த்தநண் பின்னாஇடங்கழி யாளர் தொடர்பின்னா வின்னாகடனுடையார் காணப் புகல். (11)
தலைதண்ட மாகச் சுரம்போத லின்னாவலைசுமந் துண்பான் பெருமித மின்னாபுலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னா வின்னாமுலையிள்ளாள் பெண்மை விழைவு. (12)
மணியிலாக் குஞ்சரம் வேந் தூர்த லின்னாதுணிவில்லார் சொல்லுந் தறுகண்மை யின்னாபணியாத மன்னர்ப் பணிவின்னா வின்னாபிணியன்னார் வாழு மனை. (13)
வணரொலி யைம்பாலார் வஞ்சித்த லின்னாதுணர்தூங்கு மாவின் படுபழ மின்னாபுணர்பாவை யன்னார் பிரிவின்னா வின்னாஉணர்வா ருணராக் கடை. (14)
புல்லார் புரவி மணியின்றி யூர்வின்னாகல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னாஇல்லாதார் நல்ல விருப்பின்னா வாங்கின்னாபல்லாரு ணாணப் படல். (15)
உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னாநண்ணாப் பகைவர் புணர்ச்சி நனியின்னாகண்ணி லொருவன் வனப்பின்னா வாங்கின்னாஎண்ணிலான் செய்யுங் கணக்கு. (16)
ஆன்றவித்த சான்றோருட் பேதை புகலின்னாமான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னாநோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னாஈன்றாளை யோம்பா விடல். (17)
உரனுடையா னுள்ள மடிந்திருந்த லின்னாமறனுடை யாளுடையான் மார்பார்த்த லின்னாசுரமரிய கானஞ் செலவின்னா வின்னாமனவறி யாளர் தொடர்பு. (18)
குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னாநிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னாநலத்தகையார் நாணாமை யின்னாவாங் கின்னாகலத்தல் குலமில் வழி. (19)
மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னாவீர மிலாளர் கடுமொழிக் கூற்றின்னாமாரி வளம்பொய்ப்பி னூர்க்கின்னா வாங்கின்னாமூரி யெருத்தா லுழவு. (20)
ஈத்த வகையா னுவவாதார்க் கீப்பின்னாபாத்துண லில்லா ருழைச்சென் றுணலின்னாமூத்த விடத்துப் பிணியின்னா வாங்கின்னாஒத்திலாப் பார்ப்பா னுரை. (21)
யானையின் மன்னரைக் காண்ட னனியின்னாஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னாதேனெய் புளிப்பிற் சுவையின்னா வாங்கின்னாகான்யா றிடையிட்ட வூர். (22)
சிறையில்லாத மூதூரின் வாயில்காப் பின்னாதுறையிருந் தாடை கழுவுத லின்னாஅறைபறை யன்னவர் சொல்லின்னா வின்னாநிறையில்லான் கொண்ட தவம். (23)
ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னாதீமை யுடையா ரயிலிருந்த னன்கின்னாகாமமுதிரி னுயிர்க்கின்னா வாங்கின்னாயாமென் பவரொடு நட்பு. (24)
நட்டா ரிடுக்கண்கள் காண்டல் நனியின்னாஒட்டார் பெருமிதங் காண்டல் பெரிதின்னாகட்டில்லா மூதூ ருறையின்னா வாங்கின்னாநட்ட கவற்றினாற் சூது. (25)
பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னாஅரியவை செய்து மெனவுரைத்த லின்னாபரியார்க்குத் தாமுற்ற கூற்றின்னா வின்னாபெரியோர்க்குத் தீய செயல். (26)
பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னாகிழமை யுடையார்க் களைந்திடுத லின்னாவளமை யிலாளர் வனப்பின்னா வின்னாஇளமையுண் மூப்புப் புகல். (27)
கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னாவல்லாதான் சொல்லு முரையின் பயனின்னாஇல்லார்வாய்ச் சொல்லி னயமின்னா வாங்கின்னாகல்லாதான் கோட்டி கொளல். (28)
குறியறியான் மாநாக மாட்டுவித்த லின்னாதறியறியா னீரின் பாய்ந்தாட லின்னாஅறிவறியா மக்கட் பெறலின்னா வின்னாசெறிவிலான் கேட்ட மறை. (29)
நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னாகடுஞ்சின வேழத் தெதிர்சேற லின்னாஒடுங்கி யரவுறையு மில்லின்னா வின்னாகடும்புலி வாழு மதர். (30)
பண்ணமையா யாழின்கீழப் பாடல் பெரிதின்னா
எண்ணறியா மாந்தர் ஒழுக்குநாட் கூற்றின்னா
மண்ணின் முழவி னொலியின்னா வாங்கின்னா
தண்மை யிலாளர் பகை. (31)
தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா
முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னா
நன்மை யிலாளர் தொடர்பின்னா வாங்கின்னா
தொன்மை யுடையார் கெடல். (32)
கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்னா
முள்ளுடைக் காட்டி னடத்த னனியின்னா
வெள்ளம் படுமாக் கொலையின்னா வாங்கின்னா
கள்ள மனத்தார் தொடர்பு. (33)
ஒழுக்க மிலாளார்க் குறவுரைத்த லின்னா
விழுத்தகு நூலும் விழையாதார்க் கின்னா
இழித்த தொழிலவர் நட்பின்னா வின்னா
கழிப்புவாய் மண்டிலங் கொட்பு. (34)
எழிலி யுறைநீங்கி னீண்டையார்க் கின்னா
குழலி னினிய மரத் தோசைநன் கின்னா
குழவிக ளுற்ற பிணியின்னா வின்னா
அழகுடையான் பேதை யெனல். (35)
பொருளிலான் வேளாண்மை காமுறுத லின்னா
நெடுமாட நீணகர்க் கைத்தின்மை யின்னா
வருமனை பார்த்திருந் தூணின்னா வின்னா
கெடுமிடங் கைவிடுவார் நட்பு. (36)
நறிய மலர்பெரிது நாறாமை யின்னா
துறையறியா னீரிழிந்து போகுத லின்னா
அறியாண் வினாப்படுத லின்னாவாங் கின்னா
சிறியார்மேற் செற்றங் கொளல். (37)
பிறர்மனையாள் பின்னோர்க்கும் பேதைமை யின்னா
மறமிலா மன்னர் செருப்புகுத லின்னா
வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா வின்னா
திறனிலான் செய்யும் வினை. (38)
கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா
கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா
கொடுத்த விடாமை கவிக்கின்னா வின்னா
மடுத்துழிப் பாடா விடல். (39)
அடக்க முடையவன் மீளிமை யின்னா
துடக்க மிலாதவன் றற்செருக் கின்னா
அடைக்கலம் வவ்வுத லின்னாவாங் கின்னா
அடக்க வடங்காதார் சொல். (40)