ஆத்திசூடி

இயற்றியவர் : ஔவையார்
கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை 
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே
உயிர் வருக்கம்
அறம் செய விரும்பு (1)
ஆறுவது சினம் (2)
இயல்வது கரவேல் (3)
ஈவது விலக்கேல் (4)
உடையது விளம்பேல் (5)
ஊக்கமது கைவிடேல் (6)
எண் எழுத்து இகழேல் (7)
ஏற்பது இகழ்ச்சி (8)
ஐயம் இட்டு உண் (9)
ஒப்புரவு ஒழுகு (10)
ஓதுவது ஒழியேல் (11) 
ஔவியம் பேசேல் (12)
அஃகஞ் சுருக்கேல் (13)
உயிர்மெய் வருக்கம்
கண்டொன்று சொல்லேல் (14)
ஙப் போல் வளை (15)
சனி நீராடு (16)
ஞயம்பட உரை (17)
இடம்பட வீடு எடேல் (18)
இணக்கம் அறிந்து இணங்கு (19)
தந்தை தாய்ப் பேண் (20)
நன்றி மறவேல் (21)
பருவத்தே பயிர் செய் (22)
மண் பறித்து உண்ணேல் (23)
இயல்பு அலாதன செய்யேல் (24)
அரவம் ஆட்டேல் (25)
இலவம் பஞ்சில் துயில் (26)
வஞ்சகம் பேசேல் (27)
அழகு அலாதன செய்யேல் (28)
இளமையில் கல் (29)
அறனை மறவேல் (30)
அனந்தல் ஆடேல் (31)
ககர வருக்கம்
கடிவது மற (32)
காப்பது விரதம் (33)
கிழமை பட வாழ் (34)
கீழ்மை யகற்று (35)
குணமது கைவிடேல் (36)
கூடிப் பிரியேல் (37)
கெடுப்ப தொழி (38)
கேள்வி முயல் (39)
கைவினை கரவேல் (40)
கொள்ளை விரும்பேல் (41)
கோதாட் டொழி (42)
கௌவை அகற்று (43)
சகர வருக்கம் 
சக்கர நெறி நில் (44)
சான்றோ ரினத்திரு (45)
சித்திரம் பேசெல் (46)
சீர்மை மறவேல் (47)
சுளிக்கச் சொல்லேல் (48)
சூது விரும்பேல் (49)
செய்வன திருந்தச் செய் (50)
சேரிடமறிந்து சேர் (51)
சையெனத் திரியேல் (52)
சொற்சோர்வு படேல் (53)
சோம்பித் திரியேல் (54)
தகர வருக்கம்
தக்கோ னெனத்திரி (55)
தானமது விரும்பு (56)
திருமாலுக்கு அடிமை செய் (57)
தீவினை யகற்று (58)
துன்பத்திற் கிடங்கொடேல் (59)
தூக்கி வினைசெய் (60)
தெய்வ மிகழேல் (61)
தேசத்தோ டொத்துவாழ் (62)
தையல்சொல் கேளேல் (63)
தொன்மை மறவேல் (64)
தோற்பன தொடரேல் (65)
நகர வருக்கம்
நன்மை கடைப்பிடி (66)
நாடொப் பனசெய் (67)
நிலையிற் பிரியேல் (68)
நீர்விளை யாடேல் (69)
நுண்மை நுகரேல் (70)
நூல்பல கல் (71)
நெற்பயிர் விளை (72)
நேர்பட வொழுகு (73)
நைவினை நணுகேல் (74)
நொய்ய வுரையேல் (75)
நோய்க்கிடங் கொடேல் (76)
பகர வருக்கம்
பழிப்பன பகரேல் (77)
பாம்பொடு பழகேல் (78)
பிழைபடச் சொல்லேல் (79)
பீடு பெறநில் (80)
புகழ்ந்தாரைப் போற்றி வாழ் (81)
பூமி திருத்தியுண் (82)
பெரியாரைத் துணைக்கொள் (83)
பேதைமை யகற்று (84)
பையலோ டிணங்கேல் (85)
பொருடனைப் போற்றிவாழ் (86)
போர்த்தொழில் புரியேல் (87)
மகர வருக்கம்
மனந்தடு மாறேல் (88)
மாற்றானுக் கிடங்கொடேல் (89)
மிகைபடச் சொல்லேல் (90)
மீதூண் விரும்பேல் (91)
முனைமுகத்து நில்லேல் (92)
மூர்க்கரோ டிணங்கேல் (93)
மெல்லினல்லாள் தோள்சேர் (94)
மேன்மக்கள் சொற்கேள் (95)
மைவிழியார் மனையகல் (96)
மொழிவ தறமொழி (97)
மோகத்தை முனி (98)
வகர வருக்கம்
வல்லமை பேசேல் (99)
வாதுமுற் கூறேல் (100)
வித்தை விரும்பு (101)
வீடு பெறநில் (102)
உத்தமனாய் இரு (103)
ஊருடன் கூடிவாழ் (104)
வெட்டெனப் பேசேல் (105)
வேண்டி வினைசெயேல் (106)
வைகறை துயிலெழு (107)
ஒன்னாரைத் தேறேல் (108)
ஓரஞ் சொல்லேல் (109)